கம்பளை, தொரகல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 38 வயது பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவரது காதலனும் வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
2026 நவம்பர் 3 இல் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்த பாரிய தோல்வியைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்பைக் குறிவைத்து இணையத்தில் கேலி மற்றும் மீம்ஸ்கள் பரவி வருகின்றன.
களனிப் பல்கலைக்கழக பெண்கள் விடுதியொன்றில் இன்று (03) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அறையிலிருந்த மாணவிகளின் உடமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ள போதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ஆகியோரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்க லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்தியசாலை நிர்வாக செயற்பாடுகளை வினைத்திறனாக்கி, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
TIN இலக்கத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாத பொதுமக்கள் புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கும் தற்காலிக சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நுவரெலியாவில் நிலவும் கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அறைக்குள் பார்பிகியூ அடுப்பை மூட்டி உறங்கச் சென்ற தம்பதியினர் நச்சு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர்.
ரோஸ் மற்றும் தங்க நிற பாரம்பரிய திருமண ஆடை, திறந்தவெளி பூந்தோட்டம் மற்றும் போல்கொட நீரேந்துப் பகுதி பின்னணியில் அமைந்த அழகிய காட்சிகளுடன் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் நபராக நடிகை டிஷ்னி ராஜபக்ஷ மாறியுள்ளார்.